சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெக்சிகோ பெண் கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை

Added : செப் 11, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை ஆஸ்டின்பட்டியில் மெக்சிகோ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கணவருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர்48. இவரது மனைவி செசில்லி டயோனிசியா அகஸ்டா ரெய்னாடு 36. இவர்களுக்கு அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின் இருவரும் பிரிந்தனர். மெக்சிகோ நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. குழந்தையை இருவரும் தனித்தனியே குறிப்பிட்ட நாட்கள் பராமரிக்க அந் நீதிமன்றம் அனுமதித்தது.2011 ஜூலை முதல் ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் கல்வி நிறுவனத்தில் மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூர் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு குழந்தையுடன் தனியாக வசித்தார்.செசில்லி மோகினி ஆட்டம் கற்க கேரளா திருச்சூர் சென்றார்.

அங்கு தங்கியிருந்தவர், குழந்தையை பார்க்க அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்துார் வந்தார். 2012 ஏப்., 4ல் வந்தவர் குழந்தையுடன் வெளிநாடு செல்வதாக மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூரிடம் தெரிவித்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.2012 ஏப்.,9 ல் குழந்தை அடில்லா பள்ளிக்கு சென்ற பின், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூர் தாக்கியதில், செசில்லி பலியானார். அவரது உடலை 'டிராவல் பேக்'கில் வைத்து, காரில் வைத்து, பல இடங்களில் மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூர் சுற்றினார்.மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் ரோட்டில் ஒரு புதரில் பிணத்தை எரித்தார். அங்கு காரிலிருந்து கழன்ற 'கியர் பாக்ஸ் சைடு கவர்' கீழே விழுந்து கிடந்தது. இதை தடயமாக சேகரித்து, மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூரை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோவன் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X