வீட்டுமனை அங்கீகாரம் பெற, அலைக்கழிப்பு

Added : செப் 11, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடத்தில், வீட்டுமனை அங்கீகாரம் பெற, அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'அக்., 2016க்கு முன், பத்திரப்பதிவு செய்த, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை வரன்முறைப்படுத்த வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கென, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பல்வேறு காரணங்களால், அங்கீகாரம் பெறுவதில் பலரும் தாமதம் காண்பித்து வருகின்றனர். 'முறைகேடு தடுக்க, அங்கீகாரம் பெறாத வீட்டுமனை குறித்த பட்டியலை, அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்'என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது;பல்லடம் தாலுகாவில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், 20 முதல், 25 ஆயிரம் வீட்டுமனைக்கு மட்டுமே, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்னும் அங்கீகாரம் பெறவில்லை.வீட்டுமனையில் வசிக்கும் ஒருவர், வீட்டுமனை அங்கீகாரம் பெற்றிருந்தால், அவர்களின் 'எஸ்.டி.எப்.டபிள்யு.,' எண் பயன்படுத்தி, பிற நில உரிமையாளர்களும் அங்கீகாரம் பெறமுடியும்.அங்கீகாரம் பெற வேண்டி, டி.டி.சி.பி., அலுவலகம் சென்றால், ஒன்றிய அலுவலகம் செல்லுமாறு கூறுகின்றனர்.
ஒன்றிய அதிகாரிகளோ, டி.டி.சி.பி, அலுவலகம் செல்லுமாறு அலைகழிக்கின்றனர்.பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்டவற்றை கேட்பதுடன், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் ஊராட்சி தலைவரிடம் கையொப்பம் வாங்கி வர வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர்.இதனால், கூடுதல் செலவு ஏற்படுவதுடன், பலர், தங்கள் வேலையை எளிதாக்க, இடைத்தரகர்களிடம் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.
இடைதரகின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தான், பொதுமக்கள் அலைகழிக்கப்படுகின்றனரா என்ற சந்தேகம்கூட எழுகிறது.எனவே, அங்கீகாரம் பெறாத வீட்டு மனை குறித்த பட்டியலை, ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். பொதுமக்கள், எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அங்கீகாரம் பெறுவதற்கான வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X