வன்முறையை ஊக்குவிக்கும் பாக்., ஐ.நா.,வில் இந்தியா குற்றச்சாட்டு

Added : செப் 11, 2020
Share
Advertisement

நியூயார்க்:''பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டுக்குள்ளும், எல்லை தாண்டியும் வன்முறை கலாசாரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது,'' என, ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதிகளில் ஒருவரான பவுலோமி திரிபாதி குற்றஞ்சாட்டினார்.


வெறுப்பு பிரசாரம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின், 74வது கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில், 'கலாசார அமைதி' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் பங்கேற்று, ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதிகளில் ஒருவரான பவுலோமி திரிபாதி பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை பெயரை பயன்படுத்தி, இந்தியா மீது வெறுப்பு பிரசாரத்தை, பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. பாக்., அரசு, தங்கள் நாட்டுக்குள்ளும், எல்லை தாண்டியும், வன்முறை கலாசாரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.

கவலை

பாகிஸ்தானின் இதுபோன்ற நடவடிக்கைகள், சர்வதேச சமுதாயத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார். பாகிஸ்தான் பிரதிநிதி இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ஜம்மு - காஷ்மீர், பாபர் மசூதி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பதிலடியாக இந்திய பிரதிநிதி, பாகிஸ்தான் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கைஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், இந்திய - அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தனர். இதன் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 'மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது, பாக்., அரசு எந்தவித தாமதமும் இன்றி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X