சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்லாத பிரேசில் ரியால் பணத்தை ; பெண் உட்பட 7 பேர் கைது

Added : செப் 11, 2020
Share
Advertisement
 செல்லாத பிரேசில் ரியால் பணத்தை ; பெண் உட்பட 7 பேர் கைது

மதுரை : பிரேசில் நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரியால் பணத்தை மதுரையில் மாற்ற முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 'ரைஸ் புல்லிங்' மோசடி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது சிலர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பிரேசில் நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரியால் நோட்டுகளை மாற்றுவதற்காக காத்திருந்தது தெரிந்தது.இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி கருணாமூர்த்தி 47, அறந்தாங்கி ராஜேந்திரன் 45, சிவகங்கை திருமாவளவன் 61, மதுரை பேரையூர் தர்மராஜா 45, சொக்கலிங்க நகர் மகாலட்சுமி 31, உடுமலைபேட்டை ராமர் 64, உதயகுமார் 32 ஆகியோரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த, இந்திய மதிப்பில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 385 பிரேசில் ரியால் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது: கைதானவர்கள் வெளிநாட்டு டாலர்களை இந்தியா ரூபாயாக மாற்றித்தரும் புரோக்கர்கள். வேதாரண்யம் சலாலுதீன் என்பவரிடம் பிரேசில் ரியாலை கருணாமூர்த்தி வாங்கி, 'பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. உங்கள் திறமையில் காசாக்கி கொள்ளுங்கள்' என மற்ற புரோக்கர்களிடம் கொடுத்துள்ளார். இவர்களும் வெளிநாட்டு டாலர்களை வழக்கமாக வாங்குவோரிடம் பணமாக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X