சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனைத்து துறை அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

சிவகங்கை : ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தமிழக அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை, குற்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரி அனைத்து துறை ஊழியர்கள் செப்.,22ல் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகள் மீது அரசு தரப்பில் 17 பி யின் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியது. நிர்வாகிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனைதற்காலிக பணி நீக்கம் செய்தது. இதனை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசினை கண்டித்து செப்.22ல் அனைத்துத்துறையினர் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் செல்வக்குமார் கூறிதாவது; போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதனை திரும்பப்பெற வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்ததுறை சங்கங்களின் சார்பில் செப்., 22ல் தற்செயல் விடுப்பு எடுத்து, வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X