தமிழ்நாடு

ஜப்பானுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு: ஆடை கண்காட்சியில் நம்பிக்கை

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement
ஜப்பானுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு: ஆடை கண்காட்சியில் நம்பிக்கை

திருப்பூர்:'இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, ஜப்பானுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சிறந்த சூழல் உருவாகியுள்ளது' என, ஜப்பானுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார்வர்மா பேசினார்.'இந்தியா டெக்ஸ் டிரென்ட்' ஆயத்த ஆடை கண்காட்சி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நேற்று முன்தினம் (10ம் தேதி) துவங்கி, நடந்து வருகிறது. கண்காட்சி துவக்க விழா, ஆன்லைனில் நடந்தது.
கண்காட்சியை துவக்கி வைத்து, ஜப்பானுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார்வர்மா பேசியதாவது:ஜப்பான் சந்தைக்கு, சீனாதான் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக உள்ளது. கொரோனாவுக்குப்பின், ஒரு நாட்டை மட்டுமே சார்ந்திருக்க கூடாது; வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வு, ஜப்பான் நிறுவனங்களிடையே மேலோங்கியுள்ளது.
ஜப்பான் சந்தையில், இந்திய ஆடை இறக்குமதி, மிக குறைவாகவே உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஜவுளி வர்த்தகம், அதிகரிப்பதற்கான நல்ல சூழல் உருவாகியுள்ளது.பாரம்பரிய அடிப்படையில், ஜவுளி ரகம் தயாரிக்கும் திறனை கொண்டிருப்பதால், ஜப்பானின் சிறந்த வர்த்தகராக, இந்தியா மாறமுடியும். ஆயத்த ஆடை, ஆபரண பொருட்களுக்கு, சர்வதேச அளவில், சிறந்த மற்றும் நம்பிக்கையான வர்த்தக மையமாக இந்தியா உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில்,''இந்தியாவின் ஆடை ஏற்றுமதிக்கு மிக முக்கியமான சந்தை, ஜப்பான். சீனா நீங்கலாக, மற்ற ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க, ஜப்பான் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன; இதை, அந்நாட்டு அரசும் ஆதரிக்கிறது. வாய்ப்புகளை பயன்படுத்தி, ஜப்பானுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க, இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்,' என்றார்.
ஜப்பானில் நடக்கும் கண்காட்சியில், ஏ.இ.பி.சி., உதவியுடன், இந்திய நிறுவனங்கள், புதுமையான ஆடை ரகங்களை காட்சிப்படுத்தியுள்ளன. ஜப்பான் வர்த்தகர்கள், ஆன்லைன் மற்றும் நேரடியாக அரங்குகளை பார்வையிட்டும், ஆடை தயாரிப்பு ஆர்டர் சார்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர். 'இன்று நிறைவடைய உள்ள கண்காட்சியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில், வர்த்தக வாய்ப்பு கிடைக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X