பொது செய்தி

இந்தியா

நிரந்தர 'வீடியோ கான்பரன்ஸ்' விசாரணை நீதித் துறை பார்லி., நிலைக்குழு பரிந்துரை

Added : செப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி:'கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பின்னும், நீதிமன்றங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலான விசாரணையை தொடரலாம்' என, பா.ஜ., எம்.பி., பூபேந்தர் யாதவ் தலைமையிலான சட்டம் மற்றும் நீதித் துறைக்கான பார்லி., நிலைக்குழு, பரிந்துரைத்து உள்ளது.


நீதிமன்றங்கள்

இக்குழு, ராஜ்யசபா சபாநாயகர், வெங்கையா நாயுடு விடம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா காரணமாக, கடந்த மார்ச் முதல், நீதிமன்றங்களில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைகள் நடைபெறுகின்றன.இதன் மூலம், நீதிமன்றங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு வாசலை திறந்து விட்டுள்ளன. மக்கள் நீதிமன்றங்களுக்கு அலையாமல், குறைந்த செலவில் மின்னணு முறையில் நீதி பெற வழி ஏற்பட்டுள்ளது.

அதனால், மின்னணு முறையில், நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிப்பதை, கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பின்னும் தொடரலாம். எனினும், எந்தெந்த பிரிவுகளைச் சார்ந்த வழக்குகளை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கலாம் என்பது குறித்து, அனைத்து தரப்பினருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.


குறைகள்

வழக்கமான நீதிமன்ற விசாரணையை விட, வீடியோ கான்பரன்ஸ் விசாரணை, சுலபமாகவும், மக்களுக்கு ஏற்றதாகவும், விரைந்து நீதி கிடைக்கவும் உதவுகிறது. நீதிமன்றங்களின் அமைவிடத்தை விட, அதன் சேவைதான் முக்கியம். அதனால், அனைத்து வகையிலும் சுலபமான, வீடியோ கான்பரன்ஸ் விசாரணை முறையை, குறிப்பிட்ட துறைகளைச் சார்ந்த வழக்குகளுக்கு நீடிக்கலாம்.

இந்த முறையில் சில அசவுகரியங்கள் உள்ளதாக பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. குறைகள் இருந்தாலும், தற்போதைய நடைமுறையை விட மேம்பட்டதாகவும், சுலபமாகவும் உள்ளதால், வீடியோ கான்பரன்ஸ் விசாரணையை தொடரலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-செப்-202009:28:30 IST Report Abuse
RajanRajan நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் நடைமுறை படுத்துவது மிகவும் நன்று. உடனடியாக அமல் படுத்துங்கள். தோற்று பரவலும் தடுக்க வழிவகுக்கும். நன்று.
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
12-செப்-202008:42:17 IST Report Abuse
Ramachandran Rajagopal வழக்கறிஞ்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்குமானதாகவே நீதிமன்றங்கள் உள்ளதால் மக்களுக்கு பயனுள்ள இந்த பரிந்துரையை அவர்கள் ஏற்கமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X