சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமானமில்லாத காரைக்குடி நெசவாளர்கள்

Added : செப் 11, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடியில் உள்ள நெசவாளர்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

காரைக்குடி அருகே உள்ள நெசவாளர் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. செட்டிநாட்டு காட்டன் சேலைகள், நுால் துண்டுகள், வேட்டிகள் உள்ளிட்டவை இங்கு நெசவு செய்யப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக நெசவுத்தொழில் பாதிப்படைந்ததோடு, நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஊரடங்கு தளர்வு காரணமாக, அவ்வப்போது வேலை கிடைத்தாலும் சம்பளம் பாதியாக குறைந்துள்ளதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பச்செலவு, குழந்தைகளின் படிப்புச்செலவுக்கு மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.காரைக்குடி சுப்பிரமணி கூறுகையில்; தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழில் மட்டுமே செய்து வருகிறோம். வாரத்திற்கு 3 சேலைகள் தயார் செய்கிறோம். ஆனால், ஒரு சேலைக்கு தான் சம்பளம் தருகிறார்கள். அதுவும் பாதிச் சம்பளம் தான் கிடைக்கிறது. முதலாளிகளிடம் கேட்டால் சேலைகள் விற்பனையின்றி அனைத்தும் தேங்கி கிடக்கிறது என வேதனைப்படுகின்றனர். பாதிச் சம்பளமாவது கிடைக்கிறதே என வேலையை செய்து வருகிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X