பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அவிநாசி பேரூராட்சி கழககத்தின், 2,13வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ராமசாமி, தலைமை வகித்தார். பாசறைக்கு நிர்வாகிகளை நியமிப்பது; உறுப்பினர் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், நகர கழக துணை செயலாளர் மூர்த்தி, நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால், வார்டு செயலாளர் உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.வாயக்காலில் மூழ்கி சிறுமி பலிபொங்கலுார், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலுசாமி; கூலித்தொழிலாளி. இவரது மகள் சாருலதா, 9. நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டருகே உள்ள பிற சிறுமியருடன் விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். பி.ஏ.பி., வாய்க்கால் அருகே சென்ற போது, தவறி வாய்க்காலில் விழுந்தார். புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீசார், பல்லடம் தீயணைப்பு துறையினர், பி.ஏ.பி., வாய்க்காலில் தேடி வந்தனர். நேற்று மதியம், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.தடுப்பு பொருள் வழங்கல்கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பல தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவிநாசி ஸ்ரீ செந்துார் மஹால் சார்பில், 100 பெட்ஷீட், 100 செட் தலையணை மற்றும் ஐந்து லிட்டர் சானிடைசர் ஆகியவை, அவிநாசி வட்டார சுகாதார ஆய்வாளர் ரமேஷிடம், மஹால் உரிமையாளர்கள் ஓதியப்பன், பரத் வழங்கினர். விஷ்வ பாரதி பார்க் குடியிருப்போர் சங்க செயலாளர் ெஷரீப் உட்பட பலர் பங்கேற்றனர்.உபரீநீரை திருப்பி விடணும்வட்டமலைக்கரை ஓடை பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர், கலெக்டருக்கு வழங்கிய மனு;வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம், வட்டமலைக்கரை ஓடை அணை, 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது; 15 கிராமங்களுக்கு மேல் பாசன வசதி கிடைக்கிறது. அமராவதி ஆற்றில் இருந்து காவிரி நீரை திருப்பி விடுவதன் மூலம், இப்பகுதி முழுக்க விவசாயம் செழிக்கும். எனவே, மழைக்காலங்களில், அமராவதி ஆற்றில் வரும் உபரி நீரை, இந்த அணைக்கு திருப்பிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்வட்டமலைக்கரை ஓடை பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர், கலெக்டருக்கு வழங்கிய மனு;வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம், வட்டமலைக்கரை ஓடை அணை, 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது; 15 கிராமங்களுக்கு மேல் பாசன வசதி கிடைக்கிறது. அமராவதி ஆற்றில் இருந்து காவிரி நீரை திருப்பி விடுவதன் மூலம், இப்பகுதி முழுக்க விவசாயம் செழிக்கும். எனவே, மழைக்காலங்களில், அமராவதி ஆற்றில் வரும் உபரி நீரை, இந்த அணைக்கு திருப்பிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X