கிசான் திட்டத்தில் முறைகேடு பெயர் வெளியிட கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிசான் திட்டத்தில் முறைகேடு பெயர் வெளியிட கோரிக்கை

Added : செப் 11, 2020
Share

காரைக்குடி : பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் ஊழல்செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பெயர்களைவெளியிட வேண்டும், என்று பா.ஜ., தேசிய செயலர் ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் பா.ஜ.,ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜ., தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாவட்டத் தலைவர் செல்வராஜ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தேசிய செயலர்எச்.ராஜா கூறியதாவது;கொரோனா தொற்றை பயன்படுத்தி, தனியார் மருத்துவ மனைகள்நோயாளிகளிடம் பலலட்சத்தை பறிக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆய்வு முடிந்தவுடன் மோடி அரசு ஏழை மக்கள்அனைவருக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்குவதில்உறுதியாக உள்ளது.பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் ஊழல்செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X