இந்திராணிக்கு அடுத்த செல்லில் ரியா; மின்விசிறி, படுக்கை எதுவும் கிடையாது!

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Rhea Chakraborty, Jail Cell, Indrani Mukerjea

மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மறைந்த நடிகர் சுஷாந்தின் காதலி ரியா, மும்பை பைகுலா சிறையில் இந்திராணி முகர்ஜிக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் ஜூன் மாதம் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இவ்வழக்கு விசாரணையை ஆரம்பத்தில் மும்பை போலீஸ் கவனித்தது, பின்னர் உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது. அவர்கள் விசாரணையில் முக்கிய திருப்பமாக சுஷாந்த், காதலி ரியா அவரது சகோதரர் ஷோவிக் ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் பல மணி நேர நடத்தப்பட்ட விசாரணையில், சுஷாந்திற்காக கஞ்சா வாங்கி தந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு விசாரிக்க அவரை செவ்வாயன்று கைது செய்தனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனுக்களும் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன.


latest tamil newsஇந்த நிலையில் பைகுலா சிறையில் ரியா அடைக்கப்பட்டுள்ளார். சுஷாந்த் மரண வழக்கில் தொடர்புடையவர் என்பதால், பிற கைதிகள் தாக்கக் கூடிய ஆபத்து உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி ஒற்றை அறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த அறையில் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திரானி முகர்ஜி உள்ளார். ரியாவின் அறையில் மின்விசிறி, படுக்கை என எந்த வசதியும் கிடையாது. உறங்குவதற்கு சிறை நிர்வாகம் பாய் மட்டும் தந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
13-செப்-202014:29:19 IST Report Abuse
Hari அவருக்கு போதைக்கான எல்லா வஸ்துக்களும் இங்கு கிடைக்கும் ,சிறைக்காவலர்களுக்கு கொண்டாட்டம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-செப்-202015:08:36 IST Report Abuse
S. Narayanan எல்லாம் மாயை
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-செப்-202014:39:26 IST Report Abuse
r.sundaram சரியான ஜோடி. ஒருவர் பெத்த மகளையே கொன்றவர், மற்றவர் காதலனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X