பொது செய்தி

தமிழ்நாடு

பகல்நேர காய்கறி மார்க்கெட் : விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 11, 2020
Share
Advertisement
 பகல்நேர காய்கறி மார்க்கெட் : விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்;'திருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், பகலில் இயங்க அனுமதிக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கொரோனா ஊரடங்கின் போது, கூட்டம் சேர்வதை தவிர்க்க, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், இரவில் இயங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது.
தற்போது, அரசு முழு அளவில் தளர்வு அறிவித்துள்ளது.வணிக வளாகங்கள், கடைகள், பனியன் நிறுவனங்கள், முழு நேரமும் இயங்குகின்றன. இந்நிலையில், இரவில், காய்கறி நுகர்வு குறைவாக இருப்பதால், மார்க்கெட் கடைகளையும், பகலில் இயக்க, அனுமதிக்க வேண்டுமென, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையிலான விவசாயிகள், நேற்று கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். 'கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என, கலெக்டர் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X