பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு பயிற்சி

Added : செப் 11, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிர்வகிக்கும், சுற்றுலா பகுதி விடுதிகள், படகு குழாம்கள் உள்ளிட்டவை, பல மாதங்களாக மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தனியார் நிறுவனம் மூலம், தற்போது, பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.சென்னை மண்டல பகுதியினருக்கு, மாமல்லபுரம் விடுதியில், நேற்று முன்தினம், பயிற்சி துவக்கப்பட்டது. துவக்கத்தில், படகு குழாம், மோட்டார் படகு ஓட்டுனர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.

தனியார் நிறுவன பிரதிநிதி, படகை, பாதுகாப்பாக இயக்குவது, பயணியர் பாதுகாப்பு, உயிர்காப்பு ஜாக்கெட் பயன்படுத்துவது, படகிலிருந்து, தவறி விழுந்தவரை, பாதுகாப்பாக மீட்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். விடுதி, உணவகம் என, வெவ்வேறு பிரிவினருக்கு, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X