பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் காலியிடங்கள் மாணவர்களுக்கு வாய்ப்பு

Added : செப் 11, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில், காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.இக்கல்லுாரியில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான காலியிடங்களும், கணித பிரிவில், அனைத்து பிரிவினருக்கான காலியிடங்களும் உள்ளன.இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், கல்லுாரிக்கு நேரடியாக வந்து, 50 ரூபாய் செலுத்தி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும், 15ம் தேதி மாலை, 4:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான சேர்க்கை, 16ம் தேதி நடைபெறும்.எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், அசல் ஜாதி சான்றிதழ் காண்பித்து, 2 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம் என, கல்லுாரி முதல்வர் முனைவர் ப.பத்மினி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X