சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அரசியல்வாதிக்கான தகுதி!

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பக்க வாத்தியம்

சென்னை, திருவேற்காடு நகராட்சியில், குப்பை அகற்றும், பேட்டரி வாகனங்களின் சேவை துவக்கம் மற்றும் பூங்காக்கள் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவேற்காடு நகராட்சி கட்டடத்தில் இருந்து, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்து சென்றார்.அப்போது, நகராட்சி அலுவலக வாசலில், குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த, ஒரு காரை பார்த்து அதிருப்தி அடைந்தவர், 'இந்த வண்டி யாருதுப்பா... கொஞ்சம் தள்ளி நிறுத்துங்க' என்றார். அருகில் இருந்த கட்சிக்காரர், அவரிடம், 'அண்ணே, அது உங்க வண்டி தான்' என, கிசுகிசுத்தார்.உஷாரான அமைச்சர், 'ஆமாப்பா... அதனால் தான் சொல்றேன். நிகழ்ச்சிக்கு இடையூறா இருக்கும்ல...' எனக் கூறி, நிலைமையை சமாளித்தார்.அதைக்கண்ட மூத்த நிருபர், 'எதையும் சமாளிக்கிற வித்தை தெரிஞ்சவர், அரசியல்வாதியாக முடியும்... நிரூபிச்சுட்டாருல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
12-செப்-202013:34:05 IST Report Abuse
Anantharaman Srinivasan பாண்டிய ராஜன் எதையும் சமாளிக்கிற வித்தை தெரிஞ்சவர், அதனால்தான் தேமுதிகவில் இருந்து வந்தவுடன் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டு அமைச்சரும் ஆகி ஜெ.. இறந்தபின் பன்னீர் பின்னால் சென்று தாடாலடியாக அணிமாறி எடப்பாடி அமைச்சரவையிலும் தொடர்கிறார். கைதேர்ந்த அரசியல்வாதியாக நிரூபிச்சுட்டாருல...'
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X