சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கொடுக்கிற தெய்வம்...!

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement
அக்கம் பக்கம்

'அதிர்ஷ்ட தேவதையின் பார்வை, இவர் பக்கம் முழுமையாக திரும்பி விட்டது. அதனால் தான், பதவியும், பாராட்டும் குவிகிறது' என, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பற்றி வயிற்றெரிச்சலுடன் பேசுகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், காங்கிரசின் லோக்சபா குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டபோது, அனைவரது விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன.'மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, இவருக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது' என, கட்சி நிர்வாகிகள் கிசுகிசுத்தனர். சமீபத்தில், டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தினத்தின் போது நடந்த தேசியக் கொடி ஏற்றும் விழாவில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு, ராகுல் முக்கியத்துவம் அளித்தார். அப்போதும், 'என்ன நடக்குது இங்கே' என, பலரிடமும் முணுமுணுப்பு எழுந்தது.
இந்த சம்பவம் நடந்த, அடுத்த சில வாரங்களிலேயே, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக சவுத்ரியை நியமித்து, கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்தது. ஆறு மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சவுத்ரிக்கு முக்கியமான பதவி கிடைத்துள்ளது, காங்கிரஸ் கட்சியினரிடம் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினரிடமும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 'சவுத்ரிக்கு, அவரது அரசியல் வாழ்வின் உச்சகட்ட நேரம் இது தான்; கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது உண்மை தான்' என்கின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X