கொரோனா தொற்றில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டனர்

Added : செப் 11, 2020
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 45 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில், 35.42 லட்சம் பேர், தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நேற்று வரை, 5.41 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த, 24 மணி நேரத்தில், 11.64 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், 36 ஆயிரத்து, 551 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 45 லட்சத்து, 62 ஆயிரத்து, 414 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 9.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, பாதிப்புக்குள்ளானவர்களில், 20.68 சதவீதமாகும்.வைரஸ் பாதிப்பில் இருந்து, 35 லட்சத்து, 42 ஆயிரத்து, 663 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதனால் மீண்டோர் விகிதம், 77.65 சதவீதமாக உள்ளது.நேற்று ஒரே நாளில், 1,209 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில், மஹா.,வில், 495 பேர், கர்நாடகாவில், 129; உ.பி.,யில், 94; பஞ்சாபில், 88; ஆந்திராவில், 68; தமிழகத்தில், 64; மே., வங்கத்தில், 41; டில்லியில், 28; ஹரியானாவில், 25; ம.பி.,யில், 21 பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை, 76 ஆயிரத்து, 271 ஆக அதிகரித்துள்ளது. என்றாலும், இறப்பு விகிதம், 1.67 சதவீதமாக குறைந்துள்ளது.பலி எண்ணிக்கையில், 28 ஆயிரத்து, 282 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 8,154 பேருடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா, 6,937 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், மே, மாதம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவல் தொடர்பாக, மே, 11 முதல், ஜூன், 4ம் தேதி வரை, 21 மாநிலங்களை சேர்ந்த, 28 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில், நாட்டில், 0.73 சதவீதம் வயதில் மூத்தோர், வைரசால் பாதிக்கப்படுவார்கள் என, கூறப்பட்டுள்ளது. அத்துடன், மே, மாத இறுதியில், நாட்டில், 64 லட்சம் பேர் பாதிக்கப்படு வார்கள் என, அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியானது. பாதிப்பு அந்த நிலையை எட்டாததற்கு, போதிய பரிசோதனைகள் நடைபெறவில்லை என்பது, காரணமாக கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X