சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: பெற்றோர், தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, நல்வழிப்படுத்த வேண்டும். மாணவ செல்வங்கள், தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது, எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.

'டவுட்' தனபாலு: இப்படி அறிவுரை கூறி, 'வேறு எந்த மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; அவ்வாறு செய்தால், எந்த நிதியுதவியும் வழங்கப்படாது' என, நீங்கள் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி, மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டீர்களோ என்பதே, நடுநிலையாளர்களின், 'டவுட்!'

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்: முக கவசம், சமூக விலகல், கை கழுவுதல் ஆகியவற்றை, மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை, 'ஆன்லைன்' வழியாக, ஒரு லட்சம் பேருக்கு, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 'வென்டிலேட்டர்' பயன்பாடு குறைவாக இருப்பதால், ஆக்சிஜன் அதிவிரைவாக வழங்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.

'டவுட்' தனபாலு: பள்ளிகள், கல்லுாரிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுவது போல, மருத்துவமனை சிகிச்சையிலும், ஆன்லைன் சிகிச்சை வந்து விட்டதோ என்ற டவுட்டை, உங்களின் பேச்சு ஏற்படுத்துகிறது. எப்படியோ, கொரோனா என்ற அரக்கனை கட்டுப்படுத்த, ஆன்லைனிலும், ஆப்லைனிலும், தமிழக அரசு பாடுபடுகிறது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
ஜனநாயகத்தின் எஜமானர்களான, மக்களின் பேராதரவை தொடர்ந்து பெற்று வரும் தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, அரியணை ஏறும்; தமிழகத்தை பிடித்துள்ள இருள் விலகும். தி.மு.க., மீது காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப்போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, தி.மு.க.,வினர் களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
'டவுட்' தனபாலு: அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்போம் என நீங்கள் கூறுவது போல, மக்கள் உறுதியாக நினைத்தால் தான், அது நடக்கும். பிற கட்சிகள் மீது அதிகம் இல்லாமல், தி.மு.க., மீது மட்டும் ஏன் காழ்ப்புணர்ச்சியை மக்கள் காட்டுகின்றனர் என்றால், தி.மு.க., பின்பற்றும் ஹிந்து எதிர்ப்பு கொள்கை தான் என்பது, உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது. எனவே, அதை மாற்ற முயலுங்கள்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202018:28:44 IST Report Abuse
Prem உதவி செய்தது தப்பு இல்லை. ஆனால் அனைவருக்கும் தெரிந்ததுதான் தப்பு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-செப்-202006:24:38 IST Report Abuse
D.Ambujavalli அது சரி, ஆன் லைன் கல்வி என்று வசதியில்லாதவர்களும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும், ஒரே வீட்டிலுள்ள இரண்டு மூன்று குழந்தைகள் படிக்க ஆளுக்கு ஒன்று, இதென்ன கமர்கட் டா கடலை உருண்டையா, வாங்கும் நிர்ப்பந்தம், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் மன அழுத்தம், முடிவு தற்கொலை. நிவாரணம் ஏழு லட்சம்? பிறகு உபதேசம் வெகு நன்றாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X