பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.,யிடம் நேரடி புகார் அளிக்க 'ஹலோ போலீஸ்' சேவை துவக்கம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை, எஸ்.பி.,யிடம் நேரடியாக புகார் அளிக்க, 'ஹலோ போலீஸ்' சேவை துவக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தனிடம், பொதுமக்கள் நேரடியாக தகவல் தருவதற்கு, 'ஹலோ போலீஸ்' என்ற சேவை தொடங்கப்பட்டு உள்ளது.இதில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை; சூதாட்டம், போலி மதுப்பானம் விற்பனை; மணல் கொள்ளை மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த சேவை உருவாக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட குற்றங்களை பற்றி பொதுமக்கள் யாரேனும் புகார் அளிக்க விரும்பினால், 90033 90050 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவும், 'வாட்ஸ் ஆப்' மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.இதற்காக, எஸ்.பி., அலுவலகத்தில் பிரத்யேகமாக, கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிற்கு வரும் புகார்கள் மீது, தனிப்படை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இத்தகவலை, திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X