சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எதற்காக நினைவு சின்னம்?

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

எஸ்.கனகசபாபதி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: குற்றப் பின்னணி உடையோர், தேர்தலில் போட்டியிட தடை செய்ய, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது, 159 எம்.பி.,க்கள் மீதான குற்ற வழக்குகள், நிலுவையில் உள்ளனவாம்.உயர் நீதிமன்ற நீதிபதிகள், சமீபத்தில், 'குற்றப் பின்னணி உடையோர், கொள்கை வகுப்பவர்களாக இருக்கக் கூடாது. குற்றப் பின்னணி உடையோர், தேர்தலில் போட்டியிடுவதற்கும், மதம், ஜாதி ஆதரவுடன், அரசியல் கட்சிகளை துவக்குவதற்கும், தடை விதிக்க வேண்டும்; இதற்கு, அரசு சட்டம் இயற்ற வேண்டும்' என, கூறியுள்ளனர்.
தமிழகத்தில், குற்றவாளியை கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது, ஊழலில் மூழ்கிய திராவிட அரசியல்வாதிகள், இறந்த பின், புனிதராக மாற்றப்படுகின்றனர். 'குற்றவாளி' என, நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், சிலருக்கு நினைவு மண்டபம் தமிழகத்தில் எழுப்பப்படுகிறது. இது, எந்த விதத்தில் சரியானதாகும்?அவர்களுக்காக கட்டப்படும் சமாதி, நினைவுச் சின்னம் மற்றும் சிலைகளால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.'இவரைப் போல, நாமும் உருவாக வேண்டும்' என்ற எண்ணத்தை விதைப்பதற்காகத் தான், தலைவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.மறைந்த சில தலைவர்களின் நினைவுச் சின்னங்கள், 'ஊழல் செய்வது தவறில்லை' என்ற, மோசமான கருத்தை அல்லவா மக்களிடம் விதைக்கும்.


இதனால் பயன் ஒன்றுமில்லை!


ஆர்.வினோத், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம், சென்னை விமான நிலைய ஊழியர் ஒருவர், 'ஹிந்தி தெரியாததால், நீங்கள் இந்தியரா?' எனக் கேட்டுள்ளார். இது, சர்ச்சையை கிளப்பியது.முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரமும், அதே போன்ற அனுபவம் தனக்கும் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மத்திய அரசின், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடந்த, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பின்போது, அதிகாரி ஒருவர், 'ஹிந்தி தெரியாதோர் வெளியேறுங்கள்' எனக் கூறி, அதிர்ச்சி அளித்தார்.கடந்த, 2011ல், டில்லி விமான நிலையத்தில், ஹிந்தி தெரியாததால் அவமானப் படுத்தப்பட்டதாக, இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.மேற்கண்ட சம்பவங்கள், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தமிழகத்தில் துாண்டி விட்டுள்ளன; இதை, தி.மு.க., கையிலெடுத்து, அரசியல் செய்ய துவங்கியுள்ளது.கனிமொழி, சிதம்பரம், வெற்றிமாறன் மற்றும் ஆயுஷ் கருத்தரங்கில் நடந்தவை அனைத்தும், ஏற்கத்தக்க செயல் அல்ல. அதே நேரம், தனி நபர்களின் செய்கைக்காக, ஹிந்தியை குறை சொல்வது மூடத்தனம்.மேலும் தற்போது, 'நான், தமிழ் பேசும் இந்தியன்; ஹிந்தி தெரியாது போடா' போன்ற வாசகங்கள் பொறித்த, 'டீ - சர்ட்' அணிந்து, பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், பலரது கவனத்தை ஈர்த்துவிட முடியும் என்று நம்பினால், அது மிகைபடுத்தப்பட்ட பொய் பிம்பமாகவே இருக்கும்.மேலும், அந்த, 'டி - சர்ட்' அணிந்து, புகைப்படங்களை வெளியிட்ட பிரபலங்கள் பலருக்கு, ஹிந்தியோடு நல்ல தொடர்பு உள்ளது என்பது ஊரறிந்த ரகசியம். அவர்கள், ஹிந்தியை எதிர்ப்பது, அரசியலுக்காக மட்டும் தான்.மொழித் திணிப்பு என்பது எக்காலத்திலும் ஏற்கத்தக்கதல்ல. ஆனால், சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக, துாண்டி விடப்படும் மொழி உணர்வில், தமிழக மக்கள் சிக்கிவிடக் கூடாது.தற்போது நடக்கும் போராட்டம், மொழித் திணிப்பிற்கு எதிராக இருக்க வேண்டும்; ஹிந்திக்கு எதிராக அல்ல. இதற்கு ஆக்கபூர்வ தீர்வு தேடுவதை விடுத்து, ஹிந்தி பேசும் மக்களை கேலி செய்வது, ஜனநாயக நாட்டில் மொழிப்போர் துவங்க வழிவகுக்குமேயன்றி, யாதோரு பயனும் தராது.


கல்வியில் ஜாதி வேண்டாமே!



சி.பிரகாஷ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்வி வலிமையாக இருந்தால் தான், அனைத்து துறைகளிலும், நாடு வல்லமை பெற்றதாக இருக்கும்.மாணவரின் கற்கும் தகுதியை பார்க்காமல், ஜாதியைப் பார்த்து கல்வி வழங்கும் இட ஒதுக்கீடு முறை இருக்கும் வரை, திறமையான நபர்களை உருவாக்கவே முடியாது; இதன் தொடர்ச்சியாக, எந்த துறையும் வளர்ச்சி அடையாது.மருத்துவம், தொல்பொருள் ஆராய்ச்சி, கணினி, கணிதம், தொழில்நுட்பம் என, எந்த துறையாக இருந்தாலும், அதில் ஆர்வமுடைய மாணவன் படித்தால் தான், வளர்ச்சி காண முடியும்.கணக்கு என்றால், வேப்பங்காயாய் கசக்கும் மாணவனுக்கு, இட ஒதுக்கீடு என்ற பெயரில், பொறியியல், 'சீட்' கிடைத்தால், அவனால் தரமான கட்டடங்களை உருவாக்க முடியுமா?கல்வி, இன்று ஏழை - பணக்காரர் என, இரு பிரிவாகத் தான் உள்ளது; ஜாதி ரீதியாக இல்லை!எனவே, ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து, பொருளாதார ரீதியாக வழங்க வேண்டும்.'சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளாகியும், தாழ்த்தப்பட்டோர் முன்னேறவில்லை' என, சிலர் கூக்குரலிட்டால், அதற்கு அரசியல்வாதிகள் தான் காரணமே தவிர, பிற்படுத்தப்பட்டோர் அல்ல!சாதாரண பொருட்களில் இருந்து ராணுவத் தளவாடங்கள் வரை, அனைத்திற்கும் பிற நாடுகளைச் சார்ந்திருந்தோம் என்றால், அதற்கு காரணம், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கல்வி முறை தான்.மோடி தலைமையிலான மத்திய அரசு, கல்வியில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது; இதை, அனைவரும் வரவேற்க வேண்டும்.'நீட்' தேர்வில் தோல்வி அடைந்த சிலர், தற்கொலை செய்து கொண்டதால், 'அந்த தேர்வு வேண்டாம்' என சொல்வது முட்டாள்தனம். ஒரு காலத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தோரில், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அதற்காக, அந்த தேர்வுகள் கூடாது என்றா போராடினோம்.மாணவரின் தகுதியை அறிய, தேர்வு அவசியமான ஒன்று.கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, மாணவரின் தகுதிக்கேற்ப, கல்லுாரி படிப்பில், 'சீட்' வழங்க வேண்டும்; அதன் வழியாகத் தான், இந்நாடு முன்னேற்றம் அடையும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji P S - Chennai,இந்தியா
12-செப்-202011:06:25 IST Report Abuse
Balaji P S தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு புலிப்பாக்கம் சாரங்கன் சர்வமங்களா நகரிலிருந்து இன்றைய நாளிதழ் (12.09.2020) ரஜினியின் தனிக்கட்சி நவம்பரில் துவக்கம்? என்ற செய்து காதுக்கு இனிமையாக உள்ளது. இருந்தாலும் ரஜினி ஆன்மீக சிந்தனையுடன் கட்சி துவக்க இருப்பது மிகவும் நல்ல செய்திதான். முதலில் கட்சியின் அத்தனை உறுப்பினர்களும் ஆன்மீக சிந்தனைக்கு தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும். மக்களிடத்தில் ஆன்மீக உணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். கிருபானந்த வாரியார் சிறுவர்களுக்கு ஒரு சிறுகதை சொன்னார். நம் இதழில் கூட அதைப்பற்றி வந்தது. மனிதர்கள் இறந்தவுடன் அவர்களின் சடலங்கள் காட்டிற்கு எடுத்துச் சென்று விடுவார்கள். அங்கு எரிப்பதோ, புதைப்பதோ வழக்கம். ஆனால் பிராணிகள் இறந்தால் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை சிறுவர்களிடம் கேட்டார். சிறுவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. வாரியார் விளையாட்டாக சிறுவர்களுக்கு பதில் கூறினார். வாயில்லாத ஜீவன் இறந்தால் மனிதனின் வயிற்றுக்குத்தான் செல்கிறது என்று கூறினார். அதுபோல் ரஜினியின் கட்சியினர் முதலில் எல்லோரும் சைவத்துக்கு மாறி பிறகு கட்சியை முன்கொண்டுவர பாடுபடவேண்டும். இதை செய்தால் ரஜினியின் கட்சி கண்டிப்பாக தமிழத்தில் சிறந்த கட்சியாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X