சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 11, 2020
Share
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீட் தேர்வை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தால், 'நம்மால் முடியாது போல...' என தவறாக நினைக்கும் நம் மாணவச் செல்வங்கள், தவறான முடிவு எடுக்கத் தான் செய்வர். மாணவர்களின் உயிர், அரசியல் தலைவர்களின் பேச்சில் தான் உள்ளது...' என, சொல்ல வைக்கும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: 'நீட்' நுழைவுத் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த, தி.மு.க.,வும், அதை செயல்படுத்திய, இ.பி.எஸ்., அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதுபோல், நாடகம் ஆடுகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான், மாணவர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது.

'அதை மக்கள் அறிந்ததால் தான், நீண்ட காலமாக, தி.மு.க.,வை எதிர்க்கட்சியாகவே வைத்திருந்தனர்... என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: ஹிந்தி வேண்டாம்; அது குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் என்பது, மக்கள் கோஷம் அல்ல. தி.மு.க.,வின் அரசியல் கோஷம்.

'போர்க்குணம் நிரம்பிய, குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் நிலைமை மாற வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாகர்கோவில் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் பேச்சு: நாகர்கோவிலில், பாதாள சாக்கடை திட்டம், நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பணி, சரியாக திட்டமிடப்படாமல் செய்யப்படுகிறது. சாலைகளில் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது. கொரோனாவில் மக்கள் வேதனை அனுபவித்து வரும் நிலையில், நாகர்கோவில் மக்கள் மேலும் ஒரு வலியை தாங்க வேண்டிய நிலை உள்ளது.

'தமிழ், ஹிந்தி மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, துளு என, பல மொழிகளை அனைவரும் கற்க வேண்டும்; அப்போது தான், பொருளாதாரம் மட்டுமின்றி அறிவும் வளர்ச்சி பெறும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., அமைப்பு சாரா அணி மாநில தலைவர் பாண்டித்துரை பேட்டி:வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ் கற்று கொள்ளக்கூடாது என, வட மாநிலங்களில் யாரும் போராடுவதில்லை. ஆனால், தமிழகத்தில் தான், ஹிந்தி கற்று கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு ஹிந்தி அவசியம்.

'பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் இந்த நல்ல திட்டத்தை, மாநில அரசு தாராளமாக செயல்படுத்தலாம்...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், மாநில பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் அறிக்கை: தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு, அங்கன்வாடி மையங்கள், பள்ளி குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும். தற்போது ஆவினில் தேங்கிய பவுடரை, கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் பால் பவுடராக வழங்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X