சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

விளம்பரத்தால் மக்களை அடைந்தேன்!

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement
  சொல்கிறார்கள்

இன்ஜினியர் படிப்பு, பெரிய கம்பெனியில் வேலை என்று விரும்பிய இளைஞர்கள், சொந்தத் தொழில், உழைப்புக்கேற்ற வருமானம் என்று நினைக்கத் துவங்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரான, கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த ரமேஷ்: அப்பா கிருஷ்ணனுக்கு தச்சுவேலை. கஷ்டப்பட்டு உழைத்து, 10 லட்சம் ரூபாய் வரை செலவு பண்ணி, என்னை இன்ஜினியரிங் படிக்க வச்சார். அந்தக் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டார். கடந்த, 2014-ல் இன்ஜினியரிங் முடிச்சேன். உடனே, 8,000 ரூபாய் சம்பளத்துல, குஜராத்துல, ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அப்படியே, நான்கு ஆண்டுகளில், 42 ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தது. இந்நிலையில், 2018-ல், நான் பணியாற்றிய கம்பெனியில், நான் பார்த்த புராஜெக்ட் முடிந்து விட்டது; அந்த கம்பெனியில் தொடர்ந்து வேலை இல்லை. பல இடங்களில் முயற்சி செய்தும், சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால், ஊருக்கு திரும்பி விட்டேன்.
குளித்தலையில் சரியான வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யுற ஷோரும் இல்லை. அதனால், அதைத் துவங்கலாம்னு முடிவு பண்ணி னேன். எங்கப்பா, 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார்.
நான் கடைசியா வேலை பார்த்த நிறுவனத்தின், 'சேலரி ஸ்லிப்'பைக் காட்டி, ஒரு தனியார் வங்கியில், 12 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன்.

அப்படியும், இப்படியுமாக, 22 லட்சம் ரூபாயை மூலதனமா வச்சு, எலக்ட்ரானிக்ஸ் கடையைத் திறந்தேன். பெரிய நிறுவனங்கள் கிட்ட பேசி, அவங்க நேரடி டிஸ்ட்ரிபியூட்டராக ஆனேன். 'டிவி' பிரிஜ், வாஷிங் மெஷின், ஏர்கூலர், 'ஏசி' இன்டெக் ஷன் ஸ்டவ்னு பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆன்லைன் விலைக்கே விற்க ஆரம்பிச்சேன். இருந்தாலும், ஆரம்பத்துல கூட்டம் வரலை. லோக்கல் 'டிவி' சேனல்கள்ல விளம்பரம்
செஞ்சேன். ஆட்டோ மூலம், ஒரு மாதம் முழுக்க குளித்தலையைச் சுற்றி யுள்ள கிராமங்களின் மூலைமுடுக்கெல்லாம் விடாமல் விளம்பரம் செஞ்சேன். அதன்பிறகு, கடைக்குக் கொஞ்சம் கூட்டம் வந்துச்சு. முதல் மாசம், வெறும், 6,000- ரூபாய்க்கு தான் விற்பனையாச்சு. நான் கஷ்டப்படறதைப் பார்த்து, எங்க அண்ணன் என்னோட பார்ட்னரானார். அதனால கூடுதல் தொழிலாக, மொபைல் போன்களையும் சேர்த்து விற்க ஆரம்பிச்சேன். இதனால், வியாபாரம் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. தீபாவளி, பொங்கலுக்கு சிறப்பு ஆபர்களை அறிவித்தோம். அது மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சு. கஸ்டமர்களுக்கு எங்க மேல நல்ல அபிப்ராயம் வந்துச்சு. எங்க வருமானம் பெருகிடுச்சு. நான் வாங்கின கடனையெல்லாம் வேகமா கட்ட முடிஞ்சது.
குளித்தலை கனரா வங்கியில், 4 கோடிக்கு கடன் தந்தாங்க. அதை வச்சு, குளித்தலை பேருந்து நிலையம் அருகிலேயே பெரிய பில்டிங்கை சொந்தமா வாங்கினோம். கூடிய விரைவில் நாங்க அந்தக் கட்டடத்துக்குப் போயிடுவோம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X