சிறுமியை பலாத்காரம் செய்தவர் கை துண்டிப்பு

Added : செப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பானிபட்:ஹரியானாவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரின் கையை, சிறுமியின் குடும்பத்தினர் வெட்டினர்.

ஹரியானாவில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, பானிபட் நகரில், ஆகஸ்ட், 23ம் தேதி இரவு, வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கிக்கொண்டிருந்த, 7 வயது சிறுமியை, உ.பி.,யை சேர்ந்த இக்லக், 28, என்பவர் கடத்தி சென்றார்.பின், அங்குள்ள ரயில் பாதை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியை தேடி வந்த அவரது குடும்பத்தினர், தப்பி செல்ல முயன்ற இக்லக்கின் ஒரு கையை வெட்டினர். பின்னர், தங்கள் குழந்தையை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

அடுத்த நாள் காலை, ரயில் பாதை அருகே, கை துண்டான நிலையில் கிடந்த இக்லக்கை மீட்ட ரயில்வே போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். இக்லக் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இக்லக்கின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், கையை வெட்டியதற்காக, சிறுமியின் குடும்பத்தினர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-202011:29:22 IST Report Abuse
Syed Mustafa கையோட சேர்த்து ...யும் கட் பண்ணியிருக்கணும் .
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-செப்-202001:00:14 IST Report Abuse
தமிழ்வேல் கையை வெட்டி என்ன பிரயோசனம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X