பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு தமிழகத்துக்கு ரூ.335 கோடி

Added : செப் 11, 2020
Share
Advertisement

புதுடில்லி:மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு, ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில், தமிழகத்துக்கு மட்டும், 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X