விற்பனை தணிக்கை அமைப்பின் தலைவராக தேவேந்திர தர்தா தேர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விற்பனை தணிக்கை அமைப்பின் தலைவராக தேவேந்திர தர்தா தேர்வு

Added : செப் 11, 2020
Share

மும்பை:நடப்பு, 2020 - 21ம் ஆண்டிற்கான, 'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்ஸ்' எனப்படும், பத்திரிகை விற்பனை தணிக்கை அமைப்பின் புதிய தலைவராக, 'லோக்மத் மீடியா' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தேவேந்திர தர்தா, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், இந்திய செய்தித்தாள்கள் சங்கம், ஐ.எப்.ஆர்.ஏ., உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி உள்ளார்.

மஹாராஷ்டிராவின், யவத்மால் கல்வி மையம் உட்பட, பல கல்வி மையங்களின் தலைவராகவும், இந்திய கால்பந்து சங்கத்தின் மேற்கு பிரிவின் நிர்வாகக் குழுவிலும் அங்கம் வகித்து வருகிறார்.லோக்மத் மீடியா குழுமம், பத்திரிகை, இணையம், 'டிவி' உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

பத்திரிகை விற்பனை தணிக்கை அமைப்பின், விளம்பரதாரர் பிரிவு பிரதிநிதியான, ஐ.டி.சி., நிறுவனத்தைச் சேர்ந்த கருணேஷ் பாலாஜி, அமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர்களுடன், ஊடகம் மற்றும் விளம்பரத் துறைகளைச் சேர்ந்த, 14 பேர், பத்திரிகை தணிக்கை அமைப்பின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X