தமிழ்நாடு

குப்பை போடும் தொட்டிகள் குப்புற கிடக்குது! எல்லாம் பெயரளவுக்குதானா?

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 குப்பை போடும் தொட்டிகள்  குப்புற கிடக்குது! எல்லாம் பெயரளவுக்குதானா?

கோவை:'துாய்மை பாரதம்' திட்டத்தில், கோவையில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியில் வைக்கப்பட்ட, பச்சை, ஊதா நிற குப்பை தொட்டிகள், கவிழ்ந்து கிடக்கின்றன. இதிலிருந்து, நகரின் துாய்மை மீது நிஜமான அக்கறை இல்லாமல், சும்மா பெயரளவுக்கு மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்துவது உறுதியாகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 850 டன் முதல், 950 டன் குப்பை சேகரமாவதாக, கணக்கு சொல்லப்படுகிறது. குப்பை தொட்டியில்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்காக, சுகாதாரப் பிரிவு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பாதி கிணறு தாண்டிய கதையாகவே இருக்கிறது.'துாய்மை பாரதம்' திட்டத்தில், மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கழிப்பறை கட்டுவதற்கு நிதி, தொட்டி வாங்குவதற்கு நிதி, குப்பையில் உரம் தயாரிக்க நிதி; காஸ் உற்பத்தி செய்ய நிதி என, பல வகைகளிலும் பணம் ஒதுக்கப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கு, பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம், தொடர்ந்து செயல்படுத்தாமல், நாளடைவில் விட்டு விடுகிறது.பச்சைக்கலரு ஜிங்குச்சா!இதற்கு உதாரணமாக, வர்த்தக நிறுவனங்கள் மிகுந்த ரோடுகளில், பச்சை மற்றும் ஊதா நிற குப்பை தொட்டி வைக்கும் திட்டத்தை சொல்லலாம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வசதியாக, இரு நிற தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம், சாயிபாபா காலனி, ஹோப்காலேஜ், சுங்கம் ரவுண்டானா உள்ளிட்ட, நகரின் பல்வேறு பகுதிகளிலும், இரு கலர்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன.
ஆனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை; தொட்டியில் போடும் குப்பையை கையாள, தொழிலாளர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கவில்லை.பல லட்சம் ரூபாய் செலவில், நகரில் பல்வேறு இடங்களில் வைகப்பட்ட தொட்டிகள், மாயமாகி வருகின்றன; சில இடங்களில் கவிழ்ந்து கிடக்கின்றன; பல இடங்களில் பயனின்றி காணப்படுகின்றன.
ரேங்க் வாங்க மட்டும்தானா!
சில வாரங்களுக்கு முன், 'துாய்மை பாரதம்' திட்டத்தில், தமிழக அளவில், கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றிருப்பதாக, மத்திய அரசு விருது அறிவித்தது. இது போல்,'ரேங்க்' பெறுவதற்காக மட்டும், எந்தவொரு செயலையும் செய்யாமல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து நடைமுறைப்படுத்தினால், உயரதிகாரிகள் வேறு நகரங்களுக்கு, மாறுதலாகி சென்றாலும், திட்டம் எப்போதும் உயிர்ப்புடன் செயல்பாட்டில் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202015:25:20 IST Report Abuse
ஆப்பு ஸ்வச் பாரத் திட்டம் போட்டு குப்பைதொட்டி வாங்கி வெச்சு பெருக்குற மாதிரி போஸ் குடுத்து அமெரிக்க பில் கேட்சிடம் விருதும் வாங்கியாச்சு. புச்சா ஏதும் இருந்தா சொல்லு நைனா...
Rate this:
Cancel
12-செப்-202009:30:05 IST Report Abuse
ருத்ரா குப்பை தொட்டியையே குப்பை போல் போட்டால் சரி இல்லையே. என்ன ஒண்ணு Damage னு தொட்டியை கணக்கு காட்டுவதற்குள் சரி செய்ய வேண்டும். தூய்மை இந்தியா?!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X