பொது செய்தி

தமிழ்நாடு

ஊடுபயிராக குறுமிளகு சாகுபடி செய்ய வாங்க! விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : செப் 11, 2020
Share
Advertisement

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்துடன் குறுமிளகு சாகுபடி செய்ய, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து, தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரபானு கூறியதாவது:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பயிர்களையும், தென்னை மற்றும் பாக்கு சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்தாண்டு மட்டும் சுமார், 300 ஏக்கர் பாக்கு சாகுபடி அதிகரித்துள்ளது.தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில், கூடுதல் லாபம் அடையும் பொருட்டு தோட்டக்கலைத்துறை, குறுமிளகு மற்றும் கோ-கோ போன்ற ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்து வருகிறது.குறுமிளகு நாற்று தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.இத்திட்டத்தின் வாயிலாக ஒரு விவசாயிக்கு, 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. ஏக்கருக்கு, 720 குறுமிளகு நாற்றுகள் இலவசமாகவும், உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சாண கொல்லிகள் உட்பட, 8,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.தற்போதுள்ள பருவநிலை, குறுமிளகு நாற்று நடவு செய்ய ஏற்ற நிலையில் உள்ளதால், அனைத்து விவசாயிகளும், இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X