ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் மனோஜ்

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, ராஷ்டிரீய ஜனதாதளஎம்.பி., மனோஜ் ஜா களமிறங்கியுள்ளதால், ராஜ்ய சபா துணைத் தலைவர் தேர்தலில், போட்டி உறுதியாகியுள்ளது.

பீஹார் சட்டசபைத் தேர்தல், அக்டோபர் - நவம்பரில் நடைபெறஉள்ள நிலையில், அங்கு ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் தலைமை தாங்கி போரிடப்போகின்றன.நேருக்கு நேர்இந்நிலையில், அதற்கு முன்பாகவே, டில்லியில், இரு கட்சிகளுக்கும் இடையில் நேருக்கு நேர் போட்டி உருவாகிஉள்ளது.

வரும், 14ல் நடைபெற உள்ள ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில், இரு கட்சிகளும் மோதுகின்றன.தே.ஜ.,கூட்டணயின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஏற்கனவே, வேட்புமனுதாக்கல் செய்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஷ்டிரீய ஜனதாதளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா நிறுத்தப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, அவர், காங்., மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா புடைசூழ, ராஜ்யசபா செயலகத்தில், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின் நிருபர்களிடம் மனோஜ் ஜா கூறியதாவது: இது, எனக்கும், ஹரிவன்ஷ்சுக்கும் இடையிலான போட்டி அல்ல இது. எதிரெதிர் சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.

கடந்த சில ஆண்டுகளாகவே, எதிர்க்கட்சிகளின் குரல்கள், ஒடுக்கப்படுகின்றன.இது, ஜனநாயகத்திற்குத்தான் பேராபத்தை தரும். எனவே, ஜனநாயகத்தை செழுமைப்படுத்தவும், அதன் மரபுகளை பேணி காக்கவும் நான் போட்டியிடுகிறேன்.

என் போட்டி, அரசுக்கு, எதிர்க்கட்சிகள் விடுக்கும், உறுதியான செய்தி. இதை உணர்ந்து, அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


எண்ணிக்கை



பா.ஜ.,வும், காங்கிரசும், பீஹார் சட்டசபைத் தேர்தலை மையமாக வைத்தே, ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலை, அணுகியுள்ளன. முன்னாள் பத்திரிகையாளரான ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும், கல்வியாளரான மனோஜ் ஜாவும், பீஹார்காரர்கள். ஜாதி அரசியலுக்கு பேர் போன பீஹாரில், இருவருமே உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

பீஹாரில், கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் இந்த ஓட்டு வங்கியை மனதில் வைத்து தான், இரு கட்சிகளும், பீஹார்காரர்களை மோத வைத்துள்ளன. இதனால், சட்டசபை தேர்தலின்போது அந்த சமூக ஓட்டு வங்கி சிதறலாம்.


பிஜு ஜனதா தளம் உத்தரவு

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சிக்கு, ராஜ்யசபாவில் ஒன்பது எம்.பி.,க்கள் உள்ளனர்.ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை ஆதரிக்க கோரி, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், நேற்று முன்தினம், நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.

ஆனால், பிஜு ஜனதா தளம் தன் நிலையை, இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடா சஸ்மித் பத்ரா கூறியதாவது:பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான, 14ம் தேதியன்று, ராஜ்யசபா பிஜு ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும், பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், கட்சியின் நிலை பற்றி, கட்சி தலைவர் முடிவு செய்வார். இவ்வாறு, அவர் கூறினார். கடந்த, 2018ல் நடந்த ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை, பிஜு ஜனதா தளம் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X