பொது செய்தி

தமிழ்நாடு

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற கோரி தாய் கண்ணீர் மனு

Added : செப் 11, 2020
Share
Advertisement
 சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற கோரி தாய் கண்ணீர் மனு

கோவை:சிறுநீரகம் பாதிக்கப்பட்ட, 13 வயது மகளை தந்தை கைவிட்ட நிலையில், வேறுவழியின்றி உதவி கோரி, தாய் ராஜநந்தினி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:சொந்த ஊர் சேலம். சிறந்த ஸ்கேட்டிங் வீராங்கனையான என் மகளுக்கு, திடீரென சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். எனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி, அறுவை சிகிச்சை நடைபெற்றது.பல லட்சம் ரூபாய் செலவளித்தும், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. மாற்றப்பட்ட சிறுநீரகத்தை காக்க, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.கணவர், உறவினர்களிடம் கல்லீரல் தானம் வழங்க, உதவி கேட்டும் ஒருவரும் உதவ முன்வரவில்லை. கணவரின் உதவியின்றி, சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருகிறேன்.கடந்த ஓராண்டாக, விடுதி ஒன்றில் தங்கி, மகளின் சிகிச்சையை தனியாக கவனித்து வருகிறேன். தற்போது, என் மகளை காப்பாற்ற, மருத்துவ வசதியும், பண வசதியும் தேவை. சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்ட மகளுக்கு, அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கண்ணீர் மல்க கூறினார்.உதவ விரும்புவோர் 74187 10622 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X