பொது செய்தி

தமிழ்நாடு

அமைதியாக வாழ பழகிக்கொண்டால், மன அழுத்தம் வராது

Added : செப் 11, 2020
Share
Advertisement

''பேராசை இல்லாமல் அமைதியாக வாழ பழகிக்கொண்டால், மன அழுத்தம் வராது; மன அழுத்தம் இல்லை என்றால் தைராய்டு பிரச்னை வராது,'' என்கிறார் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் பொதுமருத்துவத்துறைபேராசிரியர் டாக்டர் சுவாமிநாதன்.
இன்று பலர், தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனரே...?அதிக மன அழுத்தம்தான், தைராய்டு பிரச்னைக்கு முக்கிய காரணம். மரபு அடிப்படையில் பெற்றோருக்கு இருந்தால், குழந்தைகளுக்கும் தைராய்டு வர வாய்ப்புண்டு. வைட்டமின், அயோடின், தாதுக்கள் மற்றும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகள் இருந்தாலும் வரும். ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் இவை இரண்டும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு வருகிறது.ஆண், பெண் இருவரில் யாருக்கு அதிகம் வருகிறது?தைராய்டால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அலுவலக வேலை, குடும்பம், குழந்தை வளர்ப்பு என, அதிக் பொறுப்புகள் இருப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.
மாதவிடாய் துவங்கும் காலம் முதல், 45 வயது உள்ள பெண்களுக்கு, தைராய்டு பிரச்னை வருகிறது.அறிகுறிகளை தெரிந்து கொள்வது எப்படி?ஹைப்போ தைராய்டிசம் என்றால் அதிக உடல் சோர்வு, உடல் பருமன், இதய துடிப்பின் எண்ணிக்கை குறைதல், கொழுப்பு அதிகரித்தல். உள்ளிட்ட பிரச்னைகள் வரும்.ஹைப்பர் தைராய்டிசம் என்றால் உடல் வெப்பம் அதிகரிக்கும். படபடப்பு, நடுக்கம், உடல் மெலிதல், அதிகப்பசி, துாக்கம் வராமை உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும்.என்ன மாதிரியான சிகிச்சை உள்ளது?பெரும்பாலும், மருந்து, மாத்திரையால் கட்டுப்படுத்தி விடலாம். தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.தைராய்டு பிரச்னையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?மன அழுத்தம் இல்லை என்றால் தைராய்டு வராது. இருப்பது போதும் என்ற மனநிலையில், அமைதியாக வாழ பழக வேண்டும். உழைக்கும் நேரத்துக்கு இணையாக ஓய்வும், உறக்கமும் தேவை. தைராய்டு ஹார்மோன் குறைந்தால், பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி(பி.சி.ஓ.டி) பிரச்னை வரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால், தைராய்டுக்கு போகும் ரத்தக்குழாய் சுருங்கிவிடும்.இதை தவிர்க்க, என்ன உணவு சாப்பிட வேண்டும்?நம் பாரம்பரிய உணவுகளே நல்லது. எளிதாக ஜீரணம் ஆகும் உணவு சாப்பிட வேண்டும். அதிக காய்கறி, கலோரி குறைந்த உணவு சாப்பிடலாம். நேரத்துக்கு சாப்பிட்டு, துாங்கி, அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்யலாம். கோபம், எரிச்சல் இல்லாமல் அமைதியாக இருந்தால் பிரச்னை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X