சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

Added : செப் 11, 2020
Share
Advertisement

போத்தனூர்:சிறுமியை திருமணம் செய்த வெல்டர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.போத்தனூர் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது பழநி போலீஸ் ஸ்டேஷனில், சிறுமி வாலிபர் ஒருவருடன் பாதுகாப்பு கேட்டு வந்தது தெரிய வந்தது. போலீசார் பழநி சென்று, இருவரையும் போத்தனூர் அழைத்து வந்தனர்.விசாரணையில், காந்திபுரத்தை சேர்ந்த வெல்டர் விக்னேஷ், 23, சிறுமியின் வீட்டருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வரும்போது, பழக்கம் ஏற்பட்டதும், சம்பவத்தன்று காலை சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்த பின், பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றதும் தெரிந்தது.தொடர்ந்து வாலிபர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, விக்னேஷ் சிறையிலடைக்கப்பட்டார்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X