பொது செய்தி

தமிழ்நாடு

இனி கால் வலிக்க நடக்க வேண்டாம்: 40 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு

Added : செப் 11, 2020
Share
Advertisement
 இனி கால் வலிக்க நடக்க வேண்டாம்: 40 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு

அன்னூர்;புதிய ஓட்டுச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்னும் கிராம மக்களின், 40 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.மசகவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செந்தாம்பாளையம் கிராம மக்களுக்கான இரண்டு ஓட்டுச்சாவடிகள், மூன்று கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேகவுண்டன் புதூர் பள்ளியில் உள்ளன.ஓட்டு போட மூன்று கி.மீ., தூரம் நடக்க வேண்டி உள்ளது.
செந்தாம்பாளையத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும் என, 40 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர்.இதேபோல், காட்டம்பட்டி ஊராட்சி, கணேசபுரம் மக்கள் 2.5 கி.மீ., தொலைவில் உள்ள காட்டம்பட்டி பள்ளியில் வாக்களிக்கின்றனர். கணேசபுரத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க, 25 ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
நேற்று முன்தினம் அவிநாசி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பபிதா, செந்தாம்பாளையம் மற்றும் கணேசபுரம் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்தில், அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ஜ.,- காங்.,- கம்யூ., கட்சியினரிடம் தேர்தல் துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் ஆகியோர் கருத்து கேட்டனர்.கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினரும், ஓட்டுச்சாவடிகள் அமைக்க ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X