பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் பதிவு மையத்தில் நகராத வரிசை: பின்னணியில் புரோக்கர் கைவரிசை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 ஆதார் பதிவு மையத்தில் நகராத வரிசை: பின்னணியில் புரோக்கர் கைவரிசை

கோவை:கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில், ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய, நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். புரோக்கர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே காரணம் என, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில், ஆதார் மையம் செயல்படுகிறது.
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனால் இயக்கப்படுகிறது. கடந்த வாரம் சர்வர் பிரச்னை காரணமாக, ஆதார் பதிவு மற்றும் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வடக்கு தாலுகாவுக்குட்பட்ட பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாயினர்.இந்நிலையில், சர்வர் சரிசெய்யப்பட்டு ஆதார் மையம் முழுமையாக செயல்படத்துவங்கியது. ஆனால் ஆதார் பதிவு மற்றும் திருத்தத்திற்கு வருவோர், நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆதார் மையத்தில் காத்திருந்த பாலசுப்ரமணியம் கூறுகையில், ''நாளொன்றுக்கு 15 முதல் 20 பேர் வரை மட்டுமே, பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்கின்றனர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்கின்றனர். ஆனால் வரிசையில் நிற்பவர்கள் தவிர, புரோக்கர் கொடுக்கும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், காலதாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்த்தால் காலதாமதத்தை தவிர்க்கலாம்,'' என்றார்.கேபிள் டிவி தாசில்தார் ரங்கராஜனிடம், இது குறித்து கேட்டதற்கு, ''ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X