பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கும் முன் வகுப்பறை வசதிகளை மேம்படுத்துமா கல்வித்துறை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை;அரசுப்பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், ஆயிரத்து 205 அரசுப்பள்ளிகள் உள்ளன. தமிழ், ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்தது.ஒரு மாணவரை கூட, சேர்க்க முடியாமல் பள்ளிகள் திண்டாடின. கடந்தாண்டு விஜயதசமியன்று சேர்க்கை நடத்தியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக, தற்போது அரசுப்பள்ளிகளை தேடி வரும் பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தற்போது வரை, 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், புதிதாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.இவர்களுக்கு வகுப்பறை, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். விரைவில் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சூழலில், முறையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டுமென, தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு வரவழைக்கப்படுவர்.மற்ற வகுப்புகளும் அடுத்தடுத்து பள்ளிக்கு வரும் சூழலில், கூடுதல் கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும். வைரஸ் தொற்றுக்கு பின், வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது அவசியம்.அதிக மாணவர்களை, ஒரே வகுப்பறையில்,கூட்டமாக அமர வைக்க முடியாது. வழிகாட்டி நெறிமுறைகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினால் தான், கற்பித்தல் பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்படாது. பெற்றோரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டமாட்டார்கள்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X