பொது செய்தி

தமிழ்நாடு

200 வாழை மரம் சேதம்: வனத்துறையினர் ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 200 வாழை மரம் சேதம்: வனத்துறையினர் ஆய்வு

மேட்டுப்பாளையம்:காரமடை பகுதியில், மூன்று யானைகள் இரவில் விவசாய நிலங்களில் புகுந்து, 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்துள்ளன.காரமடை அடுத்த கெம்மாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிபுதூரில், விவசாயி ஒருவர் வாழை உட்பட பல்வேறு பயிர்களை பயிர் செய்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து, இவரது விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளன. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை, யானைகள் சேதம் செய்துள்ளன.இது குறித்து, காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர், சேதமடைந்த வாழைத் தோட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். விவசாய சங்க நிர்வாகிகள், இழப்பீட்டுத் தொகை குறித்து, வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X