பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுார் அருகே ஒரு ரோடு... இரு தரப்பினரால் படாதபாடு!

Added : செப் 12, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் அருகே ரோடு போட வலியுறுத்தி, ஒரு தரப்பினர் மறியலும், போடக்கூடாது என எதிர் தரப்பினர் முற்றுகையிலும் ஈடுபட்டனர்.ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தில், அன்னூர், சிறுமுகை ரோட்டில் இருந்து புள்ளாமடை வரை, 1,200 மீட்டருக்கு, ஒரு தரைப்பாலம் மற்றும் இரண்டு சிறு பாலங்களுடன், புதிதாக தார் ரோடு அமைக்க, 43 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதற்கான பணி, நேற்று சிறுமுகை ரோட்டில் துவங்கியது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர், 'ரோடு போடக்கூடாது; இது நீர்வழிப்பாதை' என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த பொதுமக்கள், 'ரோடு போட வேண்டும்' என வலியுறுத்தி சிறுமுகை ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அகற்றினர்.தெற்கு வருவாய் ஆய்வாளர் பெனசீர் பேகம், கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோர், 'இது அரசு ஆவணப்படி வண்டிப்பாதை. தடை செய்யாதீர்' என்று தெரிவித்தனர்.ஆனாலும் சிலர் வாக்குவாதம் செய்து, முற்றுகையில் ஈடுபட்டனர். போலீசார், 'இருதரப்பினரும் ஆவணங்களுடன் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இப்போது கலைந்து செல்லுங்கள்' என்று கூறி, இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X