இடைத்தேர்தல் வேண்டாம்: கேரள கட்சிகள் முடிவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்:'கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பரில் தேர்தல் நடத்த வேண்டாம்' என, கேரளாவில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, குட்டநாடு, சவாரா ஆகிய சட்டசபை தொகுதி களுக்கு, நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டது.இதற்கு, கேரள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


அழைப்பு

கொரோனா காலத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்றும், மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இது குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதில், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பா.ஜ., ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இடைத்தேர்தல்

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பினராயி விஜயன் கூறியதாவது:கேரளாவில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே, இந்த குறுகிய காலத்துக்கு இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டு, அரசுக்கு நிதிச் சுமை ஏற்படும்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்கள், மூன்று மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்; இது, கொரோனா காலம் என்பதால், தேர்தல் நடத்துவது, வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு வழி வகுத்து விடும். இது போன்ற காரணங்களால், இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என, அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல், நவம்பரில் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலையும் தள்ளி வைக்கும்படி, அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X