லடாக் எல்லையில் ராஜ்நாத் சிங் ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுடில்லி:இந்தியா - சீனா இடையிலான எல்லையில் இருக்கும் கள நிலவரம் குறித்து, ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த மே மாதம் முதல், இந்தியாவின் லடாக் எல்லையில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.இரு நாடுகளும், எல்லையில் படைகளை குவித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன், வானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று டில்லியில், ராஜ்நாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், அஜீத் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள், ராணுவ அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, லடாக் எல்லையின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், லடாக்கில், நேற்று காலை, இந்தியா - சீனா ராணுவ பிரிகேடிய கமாண்டர்கள் நடத்திய பேச்சு விபரங்கள் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

லடாக்கில், பல நாட்களாக, இரு தரப்பு கமாண்டர்களும், தினமும் சந்தித்து, கள நிலவரம் குறித்து பேசி வருகின்றனர்.இரு தரப்பினரிடையே, சுமுகமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக வந்தார் ராகுல்

நேற்று டில்லியில், பா.ஜ., எம்பி., ஜூவல் ஓரம் தலைமையில், ராணுவ துறைக்கான பார்லி., நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கு, தரமான உணவுப் பொருட்கள் சீராக சப்ளை செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட தகவல்களை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டது.

இதில், முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத் பங்கேற்று, உரிய தகவல்களை வழங்கினார்.இக்கூட்டத்தில், நிலைக் குழு உறுப்பினர்களான, காங்., எம்.பி., ராகுல், தேசியவாத காங்., தலைவர், சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல், எம்.பி., ஆக தேர்வாகி ஓராண்டு கடந்த பின், முதன் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X