மியான்மருடனான எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துகிறது தாய்லாந்து

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement

பாங்காங் : மியான்மரில் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தாய்லாந்து அதன் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசுகளும், எல்லையை மூடுதல், விமான சேவைகளை கட்டுப்படுத்துதல், பொது போக்குவரத்தை குறைத்தல் உட்பட பல்வேறு விதங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் செயல்படுத்தி வருகிறது. மியான்மர் இரண்டாவது அலை கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இரு நாடுகளும் இதுவரை ஆசியாவின் பிற இடங்களில் காணப்பட்ட பெரிய தொற்று பாதிப்புகளில் இருந்து தப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மியான்மர் அதன் பாதிப்பு விகிதத்தை நான்கு மாதங்களுக்குள் 2,265 ஆக உயர்த்தியது தாய்லாந்தை எச்சரிக்கையில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் அதிகாரிகள் மியான்மருடனான அதன் எல்லையில் இன்று பாதுகாப்பைக் கடுமையாக்கினர். அத்துடன் எல்லை பகுதிக்கு அருகிலுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களிடம் கொரோனா சோதனைகளை மேற்கொண்டனர். வைரஸைத் தடுக்க முயன்றனர். எல்லை நகரவாசிகள் மற்றும் மியான்மர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மொபைல் சோதனை லாரிகளில் நோய் தொற்றுக்கான மாதிரியுடன் சோதனைக்காக வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.


latest tamil news



தாய்லாந்தில் பல மில்லியன் கணக்கான மியான்மர் நாட்டினர் பணிபுரிகின்றனர். இதனால் தாய்லாந்தினுள் சட்டவிரோமாக நுழைவதை தடுக்க எல்லையில் ராணுவ வீரர்கள் கம்பிவேலி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாய்லாந்து வைரஸ் தொற்றை குறைப்பதில் / கட்டுப்படுததுவதில் தீவிரமாக உள்ளது. மேலும் நாட்டிற்கு முத்திரையிட்டுள்ளது, ஆனால்திரும்பி வந்த தாய் நாட்டினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தாய்லாந்தின் 3,461 பாதிப்புகளில் பெரும்பாலானவை நீண்டகாலமாக மீண்டு வந்தன. கடந்த வாரம் வரை, உள்நாட்டு பாதிப்புகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்தது. மியான்மரில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது, பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடுவது, உள்நாட்டு விமான சேவை மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கையை செயல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X