பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி இளநீ! ரூ.20க்கு வாங்கி, 40க்கு விற்பனை:மொத்த கொள்முதலில் 'சிண்டிகேட்'

Added : செப் 12, 2020
Share
Advertisement
 பொள்ளாச்சி இளநீ! ரூ.20க்கு வாங்கி, 40க்கு விற்பனை:மொத்த கொள்முதலில் 'சிண்டிகேட்'

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், இளநீருக்கு விலை நிர்ணயம் செய்வதில் வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைப்பதால், லாபமின்றி விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், ஒரு லட்சத்து, 48 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி உள்ளது.

ஒரு கோடிக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இதில், இளநீர் ரகங்களில் மட்டுமே, ஏழு லட்சம் மரங்கள் உள்ளன. மற்ற பகுதிகளை காட்டிலும் பொள்ளாச்சி இளநீர் மிகுந்த சுவையுடனும், தரமாகவும் இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி, மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில பகுதிகளிலும் கிராக்கி உள்ளது.இந்நிலையில், ஊரடங்கில் ஏற்பட்டுள்ள தளர்வுகளால், நாடு முழுவதிலும் மீண்டும் இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், விலை நிர்ணயம் செய்வதில், வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைத்து, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைத்து விலை நிர்ணயம் செய்வதால், சிக்கல் ஏற்படுகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் ஊரடங்கு விதிக்கப்பட்ட போது, இளநீர் விற்பனை மந்தமாக இருந்தது. பல கட்ட தளர்வுகளுக்குப்பின், கொரோனா பாதிப்புக்கு முன், விற்பனையான அளவுக்கே, தற்போதும் இளநீர் விற்பனை நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, அதிக அளவு வடமாநில பகுதிகளுக்கு செல்கிறது. தமிழக பகுதிகளில், 35 முதல் 40 ரூபாய் கொடுத்து மக்கள், இளநீரை வாங்கி குடிக்கின்றனர்.ஆனால், வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைத்து, விவசாயிகள் நிர்ணயித்த பண்ணை விற்பனை விலையை குறைக்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இளநீர் விற்பனை குறைவு, ஊரடங்கால் பிரச்னை, என, பல்வேறு காரணங்களைக்கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.விவசாயிகளிடம் ஆலோசித்து இந்த வாரத்துக்கு, வீரிய ஒட்டு ரக இளநீர் ஒன்றின் பண்ணை விலை, 21 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து, 16 முதல் 18 ரூபாய் வரையிலும், விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். சிறு வியாபாரிகள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பெரிய வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.தற்போது, இளநீர் விற்பனை் ஜரூராக நடப்பதால், வியாபாரிகள் அதிக லாபம் பெறுகின்றனர். ஆனால், விலையை குறைத்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து கட்டுபடியான விலையை பெற வேண்டும்; வியாபாரிகளும் இளநீருக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.முதலீடுக்கு ஏற்ப லாபம் வேண்டும்!இளநீர் வியாபாரிகள் கூறுகையில், 'ஆட்களை தோப்புக்கு அழைத்து சென்று இளநீர் வெட்டுதல், வாகனத்தில் லோடு செய்தல், வாகன வாடகை, உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. இந்த செலவுகள் போக, முதலீடுக்கு ஏற்ப லாபம் கிடைக்க வேண்டும். அதனால் தான், இளநீர் விவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை குறைத்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. சிறு வியாபாரிகள், இடைத்தரகர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X