'லைன்மேன்' பணியிடம் நிரப்பாததால் சிக்கல்: விவசாய பணிகள் பாதிப்பதால் அதிருப்தி

Added : செப் 12, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:நெகமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய மின் இணைப்புகளில், அடிக்கடி மின் வெட்டு ஏற்படும்போது, அதனை சரிசெய்ய 'லைன்மேன்'கள் இல்லாததால், விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
நெகமம் மற்றும் சுற்றியுள்ள கப்பளாங்கரை, மஞ்சம்பாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், சிறுக்களந்தை உட்பட பல கிராமங்களில், வீட்டு மின் இணைப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில், போர்வெல் மற்றும் கிணறுகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு, அடிக்கடி மின் வினியோகம் தடைபடுகிறது.மின்வெட்டு ஏற்படும் போது, மின்மாற்றியில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.தற்போது, 'லைன்மேன்'கள் பதவி உயர்வு பெற்று, வேறு பணியில் இருப்பதாலும், பணியிட மாறுதலில் சென்றுவிட்டதாலும், 'லைன்மேன்' பணியிடம் காலியாக உள்ளது.இந்நிலையில், மின் கம்பத்தில் இணைப்பு சீரமைப்பு பணியில் ஈடுபடும் போர்மேன்கள், தென்னை மரம் ஏறுபவர்களை கொண்டு, பணி மேற்கொள்கின்றனர்.
உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணியாமல் மின் கம்பங்களில் பணி செய்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க மின்வாரியத்தினர் புதிதாக 'லைன்மேன்'களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மும்முனை மின் வினியோகம் இருக்கும் நேரத்தில், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், உடனே சீரமைக்காததாலும், விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பணியில் இருந்தவர்கள் பதவி உயர்வில் சென்று விட்டனர். பதவி உயர்வு பெற்று, பணியில் இருப்பவர்கள், இரு பணிகளையும் கூடுதலாக கவனிக்கின்றனர். பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து அரசுக்கு அறிக்கை சென்றுள்ளது. மின்வாரியத்துக்கு பணியாளர்கள் தேர்வு செய்தால் மட்டுமே பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X