பொது செய்தி

தமிழ்நாடு

பன்றி தீவனமாகும் மரவள்ளி கிழங்கு

Added : செப் 12, 2020
Share
Advertisement

தேவாரம் : தேவாரத்தில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்கில் 40 சதவீதம் பன்றி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

தேவாரம் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கிழங்கு சேலத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு 'ஸ்டார்ச்' எடுக்கவும், கேரளாவிற்கு உணவு பொருளாக வாட்டு கப்பையும் முதல்தர கிழங்கும் அனுப்பப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக மரவள்ளி கிழங்கு அறுவடையில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அறுவடை தீவிரமாக நடக்கிறது.இப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும், தாமதமான அறுவடையாலும் கிழங்கில் 40 சதவீதம் வேர் போட்டு கழிவாகியுள்ளது.

அந்த கிழங்கு உணவுக்கு பயன்பாடாது என்பதால் வளர்ப்பு பன்றிகளுக்கு தீவனமாக விற்பனை செய்யப்படுகிறது. முதல் தர கிழங்கு ரூ. 12 வரை விற்பனையாகிறது. கழிவு கிழங்கு ரூ. 3க்கு பன்றி பண்ணையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X