சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அய்யலுார் ஆட்டுச்சந்தையில் நெரிசல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

அய்யலூர் : அய்யலூரில் வாரச்சந்தை மூடிக் கிடக்கிறது. ஆட்டுச்சந்தை ரோட்டில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அய்யலூரில் வியாழன்தோறும் வாரசந்தை நடைபெறும். இதே வளாகத்தில் காலை நேரம் ஆடு, கோழி, சேவல் விற்பனை நடக்கும்.கொரோனா பிரச்னையால் 5 மாதங்களாக சந்தை செயல்படவில்லை.தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவித்துள்ளனர். இதனால் நேற்று ஆட்டு வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.களர்பட்டி ரோட்டில் நின்றவாறு வர்த்தகத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. வாரச்சந்தை விஷயத்திலும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளித்தால் வியாபாரிகள், விவசாயிகள் பயன்பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X