பொது செய்தி

தமிழ்நாடு

விளைச்சல் உறுதிப்படுத்த விதை பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பயிர் சாகுபடிக்கு முன், பயிர் விளைச்சலை உறுதி செய்ய விதைகளின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பருவநிலை, இயற்கை சீற்றம், பூச்சி, நோய் தாக்குதல், விளை பொருளுக்கு நிலையற்ற விலை என, வேளாண்மை நிச்சயமற்ற தொழிலாகவே இருக்கிறது. இதில், பயிர் சாகுபடி செய்து பராமரித்து, அறுவடையின் போது எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் போனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில், விதை தரமாகவும், நல்ல முளைப்பு திறனுடனும் உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு விதைப்பது நல்லது.இதற்கு, கோவையில் விதை பரிசோதனை மையம் வேளாண் துறையால் நடத்தப்படுகிறது.விதைகளின் முளைப்பு திறன் அறிய விரும்பும் விவசாயிகள், தங்களிடமுள்ள விதைகளில், நெல் மற்றும் கீரை விதைகளாக இருப்பின், 50 கிராம்; மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை விதைகளாக இருப்பின், 500 கிராம்; சோளம், உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, வெண்டை விதைகளாக இருப்பின், 100 கிராம் விதை மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி விதைகளில், 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்ப கடிதத்துடன் இணைத்து, நேரில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு விதை மாதிரிக்கும் விதை பரிசோதனை கட்டணமாக, 30 ரூபாய் வசூலிக்கப்படும். இதனால், விதையின் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X