பொது செய்தி

தமிழ்நாடு

பட்டு புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

தேனி : மத்திய அரசு பட்டு வளர்ப்பை அதிகரிக்க 'ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம்' என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் பட்டுப்புழு, மல்பெரி செடி வளர்த்தல் லாபகரமான தொழிலாக உள்ளது. மாநிலத்தில் பட்டு வளர்ப்பில் தேனி 2வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 600ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்து புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வெண் பட்டு கூடு கிலோ ரூ.260 ல் இருந்து ரூ.310 வரை சராசரி விலைஉள்ளது. தற்போது சுப நிகழ்ச்சிகள் நடப்பதால் பட்டு ஆடைகள் பயன்பாட்டால் பட்டு நுால் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் பட்டு கூடு விலை மேலும் உயரும்.பட்டு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசு 'ஒரு உற்பத்தி ஒருமாவட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது. இதில் தேனி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளது. இத்திட்டத்தால் பட்டு வளர்ப்பில் அதிக விவசாயிகள் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசின் மானியங்கள் கூடுதலாககிடைக்கும். 200 விவசாயிகளை பட்டு புழு வளர்ப்பில் ஈடுபடுத்த திட்டம் தயாராகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X