பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட கல்லாங்குத்தில் அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த கல்லாங்குத்து பகுதியில், பாதியில் நிற்கும் வீடுகளின் கட்டுமான பணிகளை நிறைவு செய்து, அடிப்படை வசதிகள் மேம்படுத்த, அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.ஆனைமலை, தம்மம்பதி அருகே கல்லாங்குத்து பகுதியில், தனியார் அறக்கட்டளையால் பழங்குடி மக்களுக்கு, அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில், வீடுகள் கட்டும் பணி பாதியில் நின்றது. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்கவும், வீடுகள் கட்டி முடித்து, கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வலியுறுத்தி, கடந்த வாரம் பழங்குடியின மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி அதிகாரிகள், கல்லாங்குத்து பகுதியில் நேற்று முன்தினம், ஆய்வு செய்தனர். வீடுகளின் கட்டுமான பணிகளின் நிலை, தரத்தை பார்வையிட்டு, என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறதென பழங்குடியினரிடம், கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X