ஏலத்தோட்டங்களில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏலத்தோட்டங்களில் ஆய்வு

Added : செப் 12, 2020
Share

மூணாறு : கேரளா மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவால் சேதமடைந்த ஏலத்தோட்டங்களை வேளாண் ஆய்வு மைய வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- -போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த வழித்தடத்தில் மூணாறு அருகே கேப் ரோட்டில் ஜூன் 17ல் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் உருண்டு வந்த பாறைகளால் ரோட்டின் கீழ் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் ஏலத் தோட்டங்களும், சில கட்டடங்களும் சேதமடைந்தன.

ஆய்வு : இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறையில் உள்ள வேளாண் ஆய்வு மையத்தை சேர்ந்த வல்லுனர்கள் ஜெயபாபு, சுதாகரன்சுந்தர்ராஜ், நந்தகோபால் ஆகியோர் சேதமடைந்த ஏலத் தோட்டங்களை ஆய்வு நடத்தி சேதமதிப்பை கணக்கிட்டனர். அதன் அறிக்கை பெங்களூருவில் உள்ள தலைமை வேளாண் ஆய்வு மையம் மூலம் மத்திய வேளாண் அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.----------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X