பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி

Added : செப் 12, 2020
Share
Advertisement

உடுமலை:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், சீக்கியர், பார்ஸி, புத்தமதம் உள்ளிட்ட சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு, தொழில் மூலதன பொருட்களை வாங்கி, முன்னேற்றம் அடைந்திட உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினை கலைஞர்களின், ஆண்டு வருமானம், 98 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். நகர்ப்புறத்தில் வசித்தால், 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.ஆண்களுக்கு, 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் கடன் கிடைக்கும்; கடன் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்த வேண்டும்.கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல் தளத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (எண்:116) தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X