சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதலில் காயமடைந்த ஆண் யானையை தேடும் வனத்துறை

Added : செப் 12, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை, வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில், கடந்த, 7ம் தேதி இரவு இரண்டு ஆண் யானைகள் கவர்க்கல் ரோட்டில் மோதிக்கொண்டன. இதில், காயமடைந்த 31 வயது ஆண் யானை, ஆண்டிசோலையில் பரிதாபமாக இறந்து கிடந்தது.இதனிடையே, மோதலில் ஈடுபட்ட மற்றொரு யானையை வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், வனவர் முனியாண்டி மற்றும் மனித -- விலங்கு மோதல் தடுப்பு குழுவினர், தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டதால் மற்றோரு ஆண் யானைக்கும் காயம் ஏற்பட்டிருக்கும். சிகிச்சை அளிக்க, அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X