பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்துவிழிப்புணர்வு முகாம் நடந்தது.

முதன்மை மாவட்ட நீதிபதி ஜமுனா பேசியது: கிராமங்களில் குழந்தைதிருமணம் அதிகம் நடக்கிறது. இதற்கு பெற்றோர்தான் காரணம்.இந்த திருமணத்தால் பெண் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க,விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம், என்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சிபேசியது: கடந்த 8 மாதங்களில் 91 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி, 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்யும் ஆண் அல்லது அவரது குடும்பத்தாருக்கு 2 ஆண்டு சிறைஅல்லது ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும், என்றார்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X